'நான் வேலவெட்டி இல்லாம இருக்கப்ப'... 'அதெப்டி அவன் போலாம்'... 'உயிர்’ நண்பனின் பகீர் வேலையால்... திகைத்த போலீஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Sep 05, 2019 05:01 PM

தனது நண்பன் ஒருவன், மேற்படிப்புக்காக கனடாவுக்கு படிக்க செல்வதை அறிந்த, அவரது நண்பன் ஒருவன் செய்த காரியத்தால், போலீசார் திகைப்பில் ஆழ்ந்தனர்.

Jealous of His Friend Travelling Abroad, Sends Bomb Threat

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது. அதில், ‘நாளை விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போகிறேன்’ என தெரிவித்திருந்தது. இதையடுத்து உஷாரான போலீஸ், விமானநிலையத்துக்கு பாதுகாப்பு அளித்தனர். ஒருபுறம் தீவிர சோதனை நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. மற்றொருபுறம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மிரட்டல் வந்த இமெயில் முகவரியை பார்த்தபோது, அதில் சாய்ராம் என்ற பெயரில் வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த இமெயிலின் ஐபி முகவரியை வைத்து, போலீசார் அதனை ட்ரேஸ் செய்தபோது, சாய்ராமின் அறையில் இருந்த சஷிகாந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போலீசார் மிரண்டு போயினர். அதில் ‘சாய்ராம் மற்றும் சஷிகாந்த் இருவரும் பள்ளியிலிருந்து நண்பர்கள். தற்போது எம்டெக் மாணவர்களான இவர்கள், வாரங்கல்லில் ஒரே அறையில் தங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக நான் வேலையில்லாமல் இருந்துவந்தேன். என்னுடன்தான் சாய்ராமும் இருப்பான். ஆனால் சமீபத்தில் மேற்படிப்புக்காக கனடா செல்ல சாய்ராம் தயாரானான்.

அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அவனது பயணத்தை தடுக்க முயற்சி செய்து, அவன் செல்லவிருந்த நாளில் விமான நிலையத்திற்கு, அவனது இமெயிலை பயன்படுத்தி மிரட்டல் விடுத்தேன்’ என்று தெரிவித்தார். முன்னதாக கனடா தூதரகத்திற்கு சாய்ராம் குறித்து, அவதூறு தகவல்களையும் இமெயில் மூலம் சஷிகாந்த் அனுப்பியது தெரியவந்தது. பின்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததன் பேரில், சஷிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள சஷிகாந்தை நேரில் சென்று பார்த்த சாய்ராம், செலவுக்கு 500 ரூபாய் கொடுத்துவிட்டு, மேற்படிப்புக்காக கனடா செல்வதாக கூறிவிட்டு வந்துள்ளார்.

Tags : #HYDERABAD #RAJIVGANDHIINTERNATIONALAIRPORT #THREAT #BOMB