இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 08, 2019 10:10 AM

1. நடிகர் ரஜினிகாந்தை காவிமயமாக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார்.

Tamil News important Headlines read here for more NOV 8

2. அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிகைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3. ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கும் முன் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

4. உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.

5. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு செய்யக்கூடாது என சிஐஐ மாநாட்டில் முதலமைச்சர் பழனிசாமி வழியுறுத்தியுள்ளார்.

6. இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

7. ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

8. ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

Tags : #CRICKET #HEADLINES #INDVBAN #ROHITSHARMA