'சொந்தக்காரங்க இறந்துட்டாங்கனுதான் லீவு எடுத்தா.. அதுக்கு போயி'.. 'கொடூர ஆசிரியர்!'.. 'ப்ளஸ் 1 மாணவி எடுத்த சோக முடிவு!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 24, 2019 08:36 PM
மாணவிக்கு தோப்புக்கரணம் போடவைத்து தண்டனை கொடுத்த ஆசிரியர் கொடுமை தாங்காமல் 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அருகே விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த ஐஸ்வர்யா, உறவினர் இறந்ததால் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். இதனால் மாணவி ஐஸ்வர்யாவை மட்டும் கடுமையாகக் குறிவைத்து ஆசிரியர் ஞானப் பிரகாசம் கொடுமைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மாணவி ஐஸ்வர்யா தன் உறவினர் இறந்ததற்காக விடுப்பு எடுத்ததற்கு தண்டனையாக, ஆசிரியர் ஞானப்பிரகாசம், தனது வகுப்பு நேரம் முடியும் வரை ஐஸ்வரயா 150 தோப்புகரணம் போடவேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் மாணவி மயங்கி விழுந்துவிட்டதைக் கூட கண்டுகொள்ளவில்லை என்றும் மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், பருவத் தேர்வில் 2வது மதிப்பெண் எடுத்ததாலும் மாணவி ஐஸ்வர்யாவை ஆசிரியர் ஞானப்பிரகாசம் வெயிலில் நிற்கவைத்து தண்டனை வழங்கிக் கொடுமைப் படுத்தியதாகவும் மாணவிகள் கூறியுள்ளனர். இதனால் மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ள பெற்றோர்கள். ஆசிரியர் ஞானப்பிரகாசம் மீது அளித்த புகாரின் பேரில், போலீஸார் அவரை தேடி வருகின்றனர். ஆசிரியர் ஞானப் பிரகாசம் தலைமறைவாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.