'மின்னல் வேகத்தில் வந்த ரயில்'...'திடீரென கைக்குழந்தையுடன் பாய்ந்த தாய்'...நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 25, 2019 04:15 PM

ஓசூரில் கை குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hosur: Woman Dies After Jumping Onto Train With Baby; Child Safe

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில் நிலையத்தை, பெங்களூரை நோக்கி செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது ரயில்வே ட்ராக் அருகே சென்றுகொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென தனது தனது 10 மாத குழந்தையுடன் ரயிலின் முன் பாய்ந்துளார். இதில் அந்த பெண் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழக்க, அந்த பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

இதையயடுத்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், காயங்களுடன் உயிர் தப்பிய கை குழந்தையை மீட்டு சிகிச்சைகாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்த பெண்ணின் உடல் சிதறி இருப்பதால் உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது.

தற்கொலை செய்து கொண்ட பெண் யார், எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 10 மாத குழந்தையுடன் தாய் ரயிலின் முன்பு பாய்ந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #TRAIN #HOSUR #WOMAN JUMPS #MAYILADUDURAI-MYSORE EXPRESS #RAILWAY TRACKS