‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 2 டன் வாழைப்பழம்’..‘கலர் தெளித்த பட்டாணி’ மிரள வைத்த கோயம்பேடு மார்க்கெட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Nov 26, 2019 03:18 PM
சென்னை கோயம்பேடு சந்தையில் செயற்கையாக பழுக்க வைத்த 2 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் செயற்கை நிறம் ஏற்றி விற்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். சுமார் 75 கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது 2 கடைகளில் தெளிப்பான்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைத்த 2 டன் வாழைப்பழங்களை கண்டுபிடித்தனர். மேலும் அதேபோல் செயற்கை வண்ணம் பூசப்பட்ட 250 கிலோ பட்டாணி, 10 கிலோ சபுள் பீன்ஸ் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து உணவு பொருட்களில் செயற்கை நிறம் தெளித்த கடைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
Tags : #CHENNAI #KOYAMBEDU #MARKET #BANANA