விபத்துக்குள்ளான கார் மீதே மோதி... மேலே 'கவிழ்ந்த' லாரி... அப்பளம் போல நொறுங்கிய காரால்.. 'சம்பவ' இடத்திலேயே நிகழ்ந்த துயரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விபத்துக்குள்ளான கார் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 இளைஞர்கள் பலியாகினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியை சேர்ந்த மிதுன் கிஷோர் (23), பரத்(22) மற்றும் அரவிந்த்(23) ஆகிய 3 இளைஞர்களும் நேற்று காரில் கொடும்பாளூர் பகுதியில் இருந்து விராலிமலை நோக்கி வந்தனர். அப்போது வடக்காட்டுபட்டி என்னும் இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அவர்கள் கார் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.
அதே நேரம் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று அந்த கார் மீது மோதி கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல நசுங்கியது. சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இளைஞர்கள் மூவரும் பலியாகினர். விபத்து குறித்து அறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
