மாயமான '20 வயது' இளம்பெண்... 900 கி.மீ பயணம் செய்து 'விசாரணை' நடத்திய போலீசாருக்கு... காத்திருந்த ஷாக்... அதிலும் 'அந்த' விஷயம் தான் ஹைலைட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் சமீபத்தில் மாயமானார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள 35 வயது பெண் ஒருவருடன் அவர் சென்றது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களை அழைத்துச்சென்ற கார் ஓட்டுநரை பிடித்து விசாரித்தபோது அவர் ஹைதராபாத்தில் அவர்கள் இருவரையும் இறக்கி விட்டதாக தெரிவித்தார். அவர் சொன்ன முகவரிக்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கு அந்த 35 வயது பெண்ணும், அந்த 20 வயது பெண்ணும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர்.
அதிலும் அந்த 35 வயது பெண் முடியை வெட்டி ஒட்டு மீசை தாடி வைத்து ஆண் போலவே இருந்துள்ளார். போலீசார் அவர்களை விசாரித்தபோது தாங்கள் இருவரும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்ததாகவும் தங்களால் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்திருக்க முடியாது என்றும் தெரிவித்து உள்ளனர். மேலும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் பெற்றோருடன் செல்ல இருவரும் மறுத்து விட்டதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
