"துப்பாக்கிச் சூடு.. வாகன எரிப்பு!".. குறுக்கே வந்தவரின் மீது பாய்ந்த புல்லட்! கைதான திமுக எம்.எல்.ஏ.. நடுங்க வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.முக. எம்.எல்.ஏ இதயவர்மன். மற்றும் அவருடைய தந்தை லட்சுமிபதி, திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இதே ஊரைச் சேர்ந்த இமயம் குமார் என்பவருக்கும் இவரது குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், செங்கோடு கிராமத்தில் இருக்கும் சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னைக்காரர்களுக்கு இமயம்குமார் விற்றுத் தந்த விவகாரத்தை அடுத்து , நிலத்தை பார்வையிட வந்த, இமயம் குமார், சில சென்னைக்காரர்களுடன் வாக்குவாதம் எழுந்தது.
இதில் எம்.எல்.ஏவின் தந்தை லட்சுமிபதியையும், அவரது உறவினர் குருநாதன் உள்ளிட்டோரை சென்னைக்காரர்கள் அரிவாளால் வெட்டியதாகவும், பதிலுக்கு இதயவர்மனும், அவரது தந்தை லட்சுமிபதியும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிலருக்கு குண்டடி பட்டதால் பரபரப்பு உண்டானது. அதுமட்டுமல்லாமல், இரு தரப்பினரும் வாகங்களும் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.
இதனை அடுத்து லட்சுமிபதி மற்றும் குருநாதன் உள்ளிட்டோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதோடு, இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு போலீஸார், இதயவர்மன் மற்றும் லட்சுமிபதியின் துப்பாக்கியை பறிமுதல் செய்ததுடன், இருவரையும் கைது செய்து, துப்பாக்கியின் உரிமம் பற்றியும், நடந்த சம்பவத்தை பற்றியும் விரிவாக விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
