இவ்ளோ 'பெரிய' வீட்டுல... ஒரு எடத்துல கூட 'சிசிடிவி' கேமரா இல்ல... 'அதிர்ந்து' போன போலீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வசித்த கட்டிடத்தில் இருந்து போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி உள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனையில் தற்கொலை செய்து கொண்டது உறுதியானாலும் கூட, என்ன காரணத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. ஏனெனில் அவரது வீட்டில் இதுதொடர்பாக எந்தவொரு கடிதமும் கண்டறியப்படவில்லை.
இதையடுத்து போலீசார் சுஷாந்த் சிங் மரணம் குறித்து இதுவரை சுமார் 34 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த கட்டிடத்தின் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர். அதே நேரம் அவரது வீட்டில் ஒரு இடத்தில் கூட சிசிடிவி கேமரா இல்லை என்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
23 நாட்களுக்கு மேல் ஆகியும் தற்கொலைக்கான காரணம் என்பதை போலீசாரால் கண்டறிய முடியவில்லை. எனினும் பல்வேறு வழிகளில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். மறுபுறம் சுஷாந்த் சிங் தற்கொலை செய்யவில்லை என்று தெரிவிக்கும் ரசிகர்கள் இந்த வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
