VIDEO: ‘என்கவுண்டரில்’ 8 போலீசாரை ‘சுட்டு’ கொன்ற... ’பயங்கர ரவுடி’ கேங்ஸ்டர் ‘விகாஸ் துபே’ அதிரடி கைது!
முகப்பு > செய்திகள் > இந்தியா8 போலீசாரை சுட்டு வீழ்த்திய, பல குற்றப்பின்னணிகளை கொண்ட பிரபல ரவுடி விகாஸ் துபே உஜ்ஜைனியில் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார்.

கடந்த ஜூலை 2 ஆம் தேதி கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட பிரபல கேங்ஸ்டர் விகாஸ் துபே பதுங்கியிருக்கும் இடத்தை நோக்கி போலீசார் குழு நெருங்கிய போது எதிர்பாராத விதமாக, கூரையிலிருந்து போலீசார் மீது குண்டு பாய்ந்தது.
இதன்காரணமாக துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்திர மிஸ்ரா, மூன்று துணை ஆய்வாளர்கள் மற்றும் 4 கான்ஸ்டபிள்கள் இறந்தனர். மேலும் பல போலீசார் காயமடைந்தனர். ரவுடி கும்பலில் இருந்து என்கவுண்டரில் இரண்டு குற்றவாளிகள் கொல்லப்பட்ட நிலையில், விகாஸ் துபே மற்றும் அவரது மற்ற கூட்டாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதை தொடர்ந்து ஜூலை 7 ஆம் தேதி கேங்ஸ்டர் விகாஸ் துபேவை குறித்து செய்தி சொல்வோருக்கு வெகுமதி தொகையை காவல்துறையினர் ரூ .2.5 லட்சமாக உயர்த்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஜூலை 7 ம் தேதி உள்துறை அமைச்சகத்திற்கும் அறிக்கை அனுப்பப்பட்டது.
உத்தரபிரதேச காவல்துறை பல்வேறு தனிப்படை அமைத்து கேங்ஸ்டர் விகாஸ் துபேவை தேடி வந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் போலீசார் துபேவை கைது செய்துள்ளனர். மேலும் துபேயும் அவரது கூட்டாளிகளையும் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் மகாகலில் வைத்து போலீசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.
#Exclusive | TIMES NOW accesses the visuals of the arrest of Vikas Dubey in Ujjain.
TIMES NOW's Pranesh & Priyank with details. pic.twitter.com/Nn0tAMGphS
— TIMES NOW (@TimesNow) July 9, 2020

மற்ற செய்திகள்
