“ஆசைவார்த்தை கூறி வன்கொடுமை!”... 17 வயது சிறுமி தற்கொலை வழக்கில், காதலனுக்கு பிறகு, கைது செய்யப்பட்ட காதலனின் தந்தை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி, மணப்பாறை அருகே 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், சிறுமியின் காதலனின் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 17 வயது சிறுமியிடம் காதல் வார்த்தைக் கூறி, ராம்கி என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில் சிறுமி கர்ப்பிணியான நிலையில், அவர், தன் காதலன் மீது புகார் அளித்தார். எனினும் புகார் அளித்து 45 நாட்கள் கடந்தும், காதலன் ராம்கி கைது செய்யப்படாததால், சிறுமி, தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறுமியை ஏமாற்றிய ராம்கி கைது செய்யப்பட்டு, லால்குடி சிறையில் அடைக்கப்பட்டதுடன், ராம்கியின் பெற்றோர் ராம்கி தலைமறைவாக இருப்பதற்கு உதவியம் அவரது உறவினர்கள் உள்ளிட்டோரையும் போலீஸார் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார், ராம்கியின் தந்தை கந்தசாமியை கைது செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
