'மகளுடன் ஸ்கூட்டியில் வந்த தந்தை'... 'அடித்துத் தூக்கிய ஆல்டோ கார்'... நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 11, 2020 01:18 PM

மகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை காரில் வந்தவர் இடித்துத் தள்ளிவிட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video : Car rams into a scooty in Madhya Pradesh\'s Hoshigabad

மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் நகரில், தந்தை ஒருவர் தனது மகளை இருசக்கர வாகனத்தில் கூட்டிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று திடீரென வேகமாக வந்தது. இருசக்கர வாகனத்தில் வந்தவர் சுதாரிப்பதற்குள், அவரை இடித்துத் தள்ளிவிட்டு, அந்த நபரின் இருசக்கர வாகனத்தின் மீது ஏறிவிட்டு நிற்காமல் சென்றது. கீழே விழுந்த அந்த நபர் வாகனத்தைத் துரத்திக் கொண்டு சிறிது தூரம் சென்றார்.

இதனிடையே கீழே விழுந்ததில் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி சுதாரித்து எழும்பி நின்றார். உடனே சாலையில் சென்றவர்கள் ஓடி வந்து அந்த சிறுமியை ஆசுவாசப்படுத்தினார்கள். இருவரும் சிறிய காயங்களோடு உயிர் தப்பினார்கள். இதனிடையே விபத்து நடந்தபோது பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து ஹோஷங்காபாத் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் சென்ற நபருக்குப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Video : Car rams into a scooty in Madhya Pradesh's Hoshigabad | India News.