14 வயது 'சிறுமி' எரித்துக்கொலை... செய்யப்பட்ட வழக்கில் விலகியது மர்மம்?... 'உறவினரை' கைது செய்த போலீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் கங்காதேவி(14) இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியொன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் குப்பை கொட்ட சென்ற கங்காதேவி காணாமல் போனார். இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். தொடர்ந்து குப்பை கொட்ட சென்ற முள்காடு பகுதியில் சிறுமி உடல் கருகி பிணமாக கிடந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமி இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதற்கு மத்தியில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் வேறு பல கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இந்த நிலையில் சிறுமி மரணம் தொடர்பாக அவரது உறவினர் செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
