'ரூ.250 டோக்கன்... கோயில் பூசாரியின் 'மாஸ்' வியூகம்...! - '8 காவலர்களை 'கொலை' செய்த விகாஸ் துபே 'பிடிப்பட்டது' எப்படி? - பரபரப்பு பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தர பிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டு வீழ்த்திய பிரபல ரவுடி விகாஸ் துபே இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 2ம் தேதி, உத்தர பிரதேச போலீசார், பிரபல கேங்ஸ்டர் விகாஸ் துபே பதுங்கியிருக்கும் இடத்தை நெருங்கிய போது, கூரையிலிருந்து காவலர்கள் மீது குண்டு பாய்ந்தது.
அதில் 8 காவலர்கள் உயிரிழந்தனர். அதன் காரணமாக, விகாஸ் துபேவை தேடும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டன.
இந்நிலையில், இன்று காலை உஜ்ஜெய்ன் மகாகாலேஸ்வர் கோயிலில், சாதாரண மனிதர் போல் ரூ.250 டோக்கன் எடுத்து சாமி தரிசனத்திற்காக காத்திருந்துள்ளார், விகாஸ் துபே. அவரைப் பார்த்த கோயில் பூசாரி சந்தேகமடைந்து, உடனடியாக கோயிலில் இருந்த காவலரிடம் சென்று, "அங்க ஒரு ஆள் பார்க்கறதுக்கு விகாஸ் துபே மாதிரியே இருக்கான்" என்று கூறியுள்ளார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள், விரைந்து சென்று விகாஸ் துபேயை அதிரடியாக கைது செய்தனர். காவலர்கள் அவரைப் பிடித்ததும், "ஆம். நான் தான் விகாஸ் துபே" என்று அவர் சத்தம்போட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய கோயில் பூசாரி, விகாஸ் துபேவிற்கு உயிர்பயம் வந்துவிட்டதாகவும், தன்னை காவலர்கள் என்கவுன்ட்டரில் கொன்று விடுவார்கள் என்று அவர் அச்சமடைந்தாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காவலர்கள் கைது செய்யும் போது, ரவுடி துபே தப்பிக்க முயற்சி செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
