ஒரே ஒரு 'டைம்' மட்டும் பிளீஸ்... கண்டுகொள்ளாத 'வாலிபரால்' மாணவி எடுத்த விபரீத முடிவு...கடைசி 'வீடியோ'வால் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாலிபருக்கு செல்பி வீடியோ எடுத்து அனுப்பி விட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த ரம்யா என்னும் மாணவி அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சிவபார்கவ் என்னும் இளைஞருக்கும் ரம்யாவுக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்த நிலையில் சிவபார்கவ், ரம்யாவுடன் பேசுவதை திடீரென நிறுத்திக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா பலமுறை கெஞ்சி நண்பர்கள் மூலம் தூதுவிட்டு பார்த்துள்ளார். ஆனாலும் சிவபார்கவ் பேசவில்லை. இதையடுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த ரம்யா, தன்னுடைய அறையில் உள்ள கொக்கியில் துப்பட்டாவை மாட்டி அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதை காதலனுக்கு அனுப்பி வைத்து விட்டு தன்னிடம் பேசுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் லைவ் வீடியோவிலேயே ராமயா தற்கொலை செய்து கொண்டார்.
மகள் நீண்ட நேரமாக வெளியே வராததால் அவரது பெற்றோர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் பதில் வரவில்லை. கதவை உடைத்து பார்த்தபோது ரம்யா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபார்கவை விசாரித்து வருகின்றனர். ரம்யாவின் மொபைலில் இருந்த வீடியோ மற்றும் மெசேஜ்கள் அடிப்படையில் இந்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
