ரேஷன் அட்டைதாரர்களுக்கு ‘பொங்கல் பரிசு’!.. ‘ஆனா இவங்களுக்கு மட்டும்தான்’.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 26, 2019 01:47 PM

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

TN CM announces Rs1000 Pongal gift for all ration card holders

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை இன்று எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். இதனை அடுத்து பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ரூ.1000 பணம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே என்றும் சர்க்கரை மற்றும் இதர அட்டைதாரர்களுக்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #AIADMK #EDAPPADIKPALANISWAMI #PONGAL #TAMILNADU