'நியூசி.' எல்லாம் எங்களுக்கு 'தூசிடா'... அடிச்சா சிக்ஸ்... தொட்டா பவுண்டரி... 'ஆக்லாந்தை' அதிரவிட்ட இந்திய வீரர்கள்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Suriyaraj | Jan 24, 2020 05:11 PM

ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் கேஎல் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

India beat New Zealand by 6 wickets in first T20 match

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து  அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.

204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன்  களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா  7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த விராட்கோலியும், கே.எல். ராகுலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது இந்திய அணி  8.4 ஓவரில் 100 ரன்களைத் தொட்டது.

கேஎல் ராகுல் 23 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். விராட் கோலி 32 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். அவர்களுக்குப் பிறகு களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 58 ரன்கள் எடுக்க இந்தியா 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது போட்டி இதே மைதானத்தில் நாளைமறுதினம் நடக்கிறது.

Tags : #CRICKET #IND VS NEWZELAND #INDIA WINNING #FIRST T-20 #INDIA BEAT