ரூ.47,500 கோடியாக உயர்ந்த 'ஐபிஎல்' மதிப்பு..கோடிகளில் புரள்வதில் 'முதலிடம்' இந்த டீமுக்கு தான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 19, 2019 06:44 PM

சென்னை,மும்பை,பெங்களூர்,டெல்லி,பஞ்சாப்,ராஜஸ்தான்,ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா என எட்டு அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகின்றன.இதில் பெங்களூர் அணியை கோலி,சென்னை அணியை தோனி,மும்பை அணியை ரோஹித் ஆகியோர் வழிநடத்துகின்றனர்.இந்தநிலையில் நடப்பு ஆண்டில் ஐபிஎல் அணிகளின் பிராண்ட் வேல்யூ எக்கச்சக்கமாக அதிகரித்து, ரூ.47,500 கோடிகளைத் தொட்டிருக்கிறது.

IPL2019: IPL brand value rises to INR 47, 500 crore

இதில் முதலிடத்தில் இருக்கும் மும்பை அணியின் மதிப்பு ரூ.809 கோடிகளாக உள்ளது. 2-வது இடத்தில் உள்ள சென்னை அணியின் மதிப்பு ரூ.732 கோடிகளாக உள்ளது.2 ஆண்டுகள் தடைக்குப்பின் மீண்டுவந்த சென்னை அணி தோனியால் 13.1% மதிப்பு அதிகரித்து உள்ளது.அதே நேரம் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.