மலையேற்றத்தின் போது.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ ‘இளம் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Sep 08, 2019 09:57 PM

மலையேற்றத்தின் போது 500 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

US Hiker Falls 500 Feet From Cliff In US National Park

அமெரிக்காவின் அரிசோனா பகுதியைச் சேர்ந்தவர் டேனிலி பர்னெட் (29). இவர் பொழுதுபோக்கிற்காகவும், ஆர்வம் காரணமாகவும் அடிக்கடி ட்ரெக்கிங் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் இவர் யோஸ்மைட் தேசிய பூங்காவிலுள்ள தி ஹாஃப் டோம் என்ற 4800 அடி உயரம் கொண்ட மலைக்கு மலையேற்றத்திற்காக சென்றுள்ளார். அங்கு அவர் அனைத்துவிதமான உரிய பாதுகாப்புகளுடன் மலையேறியபோதும் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். 

இதைத்தொடர்ந்து பூங்காவின் அதிகாரிகள் விரைந்து சென்று அவரை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் 500 அடி உயரத்திலிருந்து விழுந்த டேனிலி அந்த அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #US #HIKER #NATIONALPARK #500FEET #CLIFF