திருச்சி சிறுவனைத் தொடர்ந்து, “அப்பா போன் மூலம், பேஸ்புக்கில் சிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றிவந்த” 16 வயது சிறுவன்.. அச்சத்தில் பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அண்மையில், யார் யாரெல்லாம் முகநூலில் ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர் என்கிற விவரங்களைச் சேகரித்தபோது அதில் பண்டாரவடையைச் சேர்ந்த ஒருவரின் செல்போனிலிருந்து குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

சம்மந்தப்பட்ட அந்த ஒருவரின் செல்போனில் உள்ள முகநூல் கணக்கு ஒன்றில் தொடர்ந்து ஒரு மாதமாக, குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது தொடர்பான இந்த தகவல் பாபநாசம் போலீஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து, விசாரணை மேற்கொண்டதில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவடை பகுதியைச் சேர்ந்த 45 வயதான ரியாஸ் அகமது என்பவரது மகனான, 16 வயதுச் சிறுவன் தனது தந்தையின் செல்போனிலிருந்து குழந்தைகளின் ஆபாச போட்டோக்களைப் பதிவேற்றம் செய்து வந்துள்ள சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தை அதிரவைத்துள்ளது.
இதையடுத்து அந்தச் சிறுவனையும் அவனின் செயலைக் கண்டிக்காத அவனது தந்தையான ரியாஸ் அகமதுவையும் போலீஸார் கைது செய்தபோது, அந்த சிறுவனோ “தெரியாம செய்துவிட்டேன் சார்” அலட்டிக்கொள்ளாமல் கூறியுள்ளான். சிறுவன் நீண்ட நேரம் செல்போனை வைத்திருப்பதைப் பார்த்தும் சிறுவனின் அப்பா சிறுவனை கண்டிக்காததால், அதையே சாதகமாக பயன்படுத்தி இந்த வேலையைச் செய்த அந்தச் சிறுவனையும் மற்றும் அவனது தந்தையையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அந்தச் சிறுவன் அடைக்கப்பட்டதுடன், ‘இந்த வழக்கு சம்மந்தமான முழு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை செய்யப்பட்டு சிறுவனது தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் திருச்சி மணப்பாறை அருகே, 14 வயது சிறுவன் தனது தந்தை ஆபாசப்படம் பார்த்துவிட்டு வைத்துவிட்டு சென்ற செல்போனை அவ்வப்போது எடுத்துப் பார்த்து, அதனால் கிளர்ச்சி அடைந்து 9 வயது சிறுமியை பின் தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்து, முடியாததால் சிறுமியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அந்த சுவடு மறைவதற்குள் அடுத்த சிறுவன் குழந்தைகள் ஆபாசப்படங்களை முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலும் அதிரவைத்துள்ளது.

மற்ற செய்திகள்
