லாக்டவுன்ல 'SOCIAL MEDIA' பக்கம் அதிகமா ‘இவங்க’ தான் இருங்காங்க.. ஆச்சரியம் அளித்த ‘சர்வே’ முடிவு..!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்இந்தியாவில் ஊரடங்கு நேரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களை அதிகமாக யார் பயன்படுத்துகிறார்கள் என மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக The Digital Usage of the Indian Moms தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் வீட்டிலிருக்கும் அம்மாக்களே அதிகமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் குறைந்தது தினமும் 2 முதல் 3 மணிநேரமாவது ஆன்லைனில் தங்களது நேரத்தை செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 36% அம்மாக்கள் லாக்டவுனில் இன்ஸ்டாகிராம் என்கிற தளம் இருப்பதும், அதில் உள்ள விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் அவர்களுக்கென கணக்கும் தொடங்கியுள்ளனர். 23% அம்மாக்கள் குழந்தை பராமரிப்பு பற்றி தெரிந்துகொள்வதாகவும், 30% அம்மாக்கள் ஷாப்பிங் செய்வதாகவும் கூறியுள்ளனர். இதிலும் முதலிடத்தில் வாட்ஸ் ஆப் தான் உள்ளது. அதில் ஷேரிங் வசதிகள் உள்ளதாகவும், அதிலிருந்து பல செய்திகள் தெரிந்துகொள்வதாகவும் கூறியுள்ளனர்.
32% அம்மாக்கள் பேரன்டிங் ஆப்தான் விருப்பமான நம்பகத்தன்மை கொண்டது என கூறியுள்ளனர். 18% பேர் மற்ற சமூக வலைதளங்களை குறிபிட்டுள்ளனர். இவ்வளவு இருந்தாலும் 55% அம்மாக்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய விருப்பமில்லை என கூறியுள்ளனர்.