'நீ எல்லாம் ஒரு தகப்பனா'... 'அந்த பிஞ்சு முகத்தை பாரு'...'கணவனின் சட்டையை பிடித்த மனைவி'... 'பிறந்து 65 நாட்களே ஆன பிஞ்சுக்கு நடந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சில சம்பவங்களை நாம் சாதாரணமாகப் படித்து விட்டுக் கடந்து சென்று விட முடியாது. அது போன்ற சம்பவங்கள் நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என யோசிக்க வைக்கும். அதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிமாதன். இவருக்குத் திருமணமாகி 11 வயதில் மகன் ஒருவன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 65 நாட்கள் கடந்த நிலையில், துளசிமாதனின் மனைவி, மகளிர் குழுவிற்குப் பணம் செலுத்த வேண்டும், எனவே குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து தனது வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தபோது அவர், கண்ட காட்சி அவரை சுக்கு நூறாக நொறுக்கிப் போட்டுள்ளது. பிறந்து 65 நாட்களே ஆன அந்த பிஞ்சு குழந்தைக்கு, துளசிமாதன் பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்துள்ளார். உடனே அவரிடம் இருந்து குழந்தையை மீட்ட அவர், நீ எல்லாம் ஒரு மனுஷனா, பிஞ்சு குழந்தைக்கு இப்படி ஒரு கொடூரத்தைச் செய்கிறாயே எனக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனே சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதையடுத்து குழந்தைக்கு நடத்தக் கொடுமை குறித்து பவானி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் துளசிமாதன் பாலியல் துன்புறுத்தல் செய்ததை உறுதி செய்தனர். இதையடுத்து அந்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
