'லாக்டவுன்' நேரத்தில் 'குதிரைக்கு' நேர்ந்த சோகம்... 'ஜம்முவில்' நடந்த 'ருசிகர சம்பவம்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு காரணமாக ஜம்முக்கு இடம் பெயர்ந்த எஜமானாரை சுமந்து வந்த குதிரையை அதிகாரிகள் தனிமைப்படுத்திய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இதுவரை மனிதர்கள் தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். தற்போது, முதல் முறையாக ஒரு குதிரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
காஷ்மீரின் சோபியான் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளாக உள்ளன. இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் இருந்து ஜம்மு பகுதியில் உள்ள ரஜோரி பகுதிக்கு தனது குதிரையில் ஒருவர் சவாரி செய்த படி வந்துள்ளார். இவர் அதிகாரிகளிடம் எந்த முன்அனுமதியும் பெறவில்லை.
பச்சை மண்டலமான ரஜோரியை வந்தடைந்ததும் மாவட்ட எல்லையிலேயே அவரை தடுத்து நிறுத்திய போலீசார் உடனே, குதிரையையும், எஜமானரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இதன் முடிவு வரும் வரை எஜமானர், தனிமை வார்டில் வைக்கப்பட்டுள்ளார். இதேபோல் குதிரையையும் தனிமைப்படுத்தி வைக்க வேண்டுமென அதன் எஜமானரின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் வாயில் பாலிதீன் போட்டு மூடப்பட்ட நிலையில், தனியாக கட்டி, ‘குவாரன்டைனில்’ குதிரை தற்போது உள்ளது.

மற்ற செய்திகள்
