இனி 'நிரந்தரமாக' வீட்டிலிருந்தே வேலை... 'அலுவலகமே' தேவையில்லை... அதிரடியாக 'பிரபல' நிறுவனம் வெளியிட்டுள்ள 'அசத்தல்' அறிவிப்பு!...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | May 13, 2020 04:45 PM

ஊரடங்கு முடிந்த பிறகும் நிரந்தரமாக அதன் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Twitter Allows Employees To Work From Home Permanently

கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதும் முதல்முதலாக ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்த ட்விட்டர் நிறுவனம் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்கள் விரும்பினால் நிரந்தரமாக அவ்வாறே வேலை செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களில் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்தபோது நல்ல பலன் கிடைத்துள்ளதால், இனி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் தேவை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அந்நிறுவனத்தின் அறிக்கையில், "ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் சூழலை விரும்பினால் ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னரும் அவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம். அதே சமயம் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதை விரும்பினால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஊழியர்களை வரவேற்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். மீண்டும் அலுவலத்திற்கு வருவதும் வீட்டிலேயே இருந்து வேலை செய்வதும் ஊழியர்களின் முடிவாகவே இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தில் முன்னரே திட்டமிடப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டிற்கான வணிகப் பயணங்கள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் ஏற்கெனவே 2021ஆம் ஆண்டிற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களும் இந்த ஆண்டு இறுதிவரை ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்துள்ள நிலையில், ஊரடங்கு முடிந்தும் நிரந்தரமாக ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்துள்ள பெருமையை ட்விட்டர் பெற்றுள்ளது.