உலக நாடுகள் எல்லாம் 'ஒண்ணு' சேர்ந்து... இந்தியாவை 'தட்டிக்கேட்க' நேரம் வந்துருச்சு... சீனாவுக்காக வரிந்து கட்டி களமிறங்கிய நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்தியாவை தட்டிக்கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்தியா-சீனா எல்லைப்பிரச்சினையால் லடாக் பகுதியில் இரண்டு நாடுகளும் ராணுவத்தை குவித்து வருகின்றன. இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் இந்தியா தீர்க்க நினைத்தாலும், சீன அதிபர் ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என தங்கள் நாட்டு ராணுவத்துக்கு நேரடியாக உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
இந்த நிலையில் சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் நாடு களமிறங்கி இந்தியாவை விமர்சனம் செய்ய ஆரம்பித்து இருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, ''இந்த எல்லை பிரச்சினையை சீனா பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயன்றது. ஆனால் இந்தியா இதற்கு அனுமதிக்கவில்லை. இந்தியா தொடர்ந்து அனுமதி இன்றி நேபாளம் அருகே கட்டுமான பணிகளை செய்தது. இதுதான் பிரச்சினைக்கு காரணம்.
அண்டை நாடுகளுக்கு எதிராக செயல்படுவதுதான் இந்தியாவின் வழக்கம். அண்டை நாடுகளுடனான உறவு தொடர்பாக இந்தியாவிற்கு நல்ல கொள்கை கிடையாது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இப்படித்தான் இந்தியா பறித்தது. அங்கு அத்துமீறல்களை செய்யும் வகையில் இந்தியா இப்படி செய்து வருகிறது. ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுத்த முயன்று இந்தியா தோல்வி அடைந்துள்ளது. பலுசிஸ்தான் மூலம் பாகிஸ்தான் உள்ளே கலகம் விளைவிக்க நினைத்தது.
உலக நாடுகள் எல்லாம் இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.இது தான் அதற்கான நேரம். அதேபோல் இந்தியா நேபாளம் உடன் சண்டை போட்டு வருகிறது. தற்போது சீனாவுடனும் இந்தியா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.இது மிகவும் ஆபத்தான விஷயம். பெரிய ஆபத்து இதனால் வர போகிறது. ஆசியாவின் அமைதி இதனால் பாதிக்கும்,'' என மிகவும் காட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
இதேபோல பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ''லடாக் மூலம் நேபாளம், பாகிஸ்தான் , சீனாவை இந்தியா சீண்டி வருகிறது. காஷ்மீரில் இந்தியா ஆக்கிரமிப்புகளை செய்து வருகிறது. அதேபோல் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி இந்தியா போர் குற்றங்களை செய்து வருகிறது. நான் ஏற்கனவே இது குறித்து எச்சரித்து இருக்கிறேன். பாசிச கொள்கை கொண்ட இந்திய அரசு இந்தியாவில் இருக்கும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் பிரச்சனை கிடையாது.அவர் அண்டை நாடுகளுக்கும், பிராந்தியத்திற்கும் பெரிய பிரச்சினையாக மாறுவார்கள், என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.