'கேரள' எல்லையில் 'வெட்டுக்கிளிகள்...' 'தமிழக விவசாயிகள்' பாதிக்கப்படும் 'சூழல்...' 'விவசாயிகள் அச்சம்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக கேரள எல்லைப்பகுதியில் வெட்டுக்கிளிகள் கூட்டம் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரியை ஒட்டியுள்ள கேரளப் பகுதியில் வெட்டுக்கிளி கூட்டம், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர். வாழை, மா, இஞ்சி இலைகளை, வெட்டுக்கிளிகள் உட்கொள்வதால், சில நிமிடங்களில், அவை வெறும் தண்டுகளாக மாறி விடும் அளவுக்கு, இவற்றின் தாக்கம் அதிகரித்து உள்ளதாக கூறுகின்றனர். இவற்றை முழுமையாக கட்டுப்படுத்தாவிட்டால், தமிழக எல்லையோர விவசாய கிராமங்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் இல்லை என்றாலும், தற்போதைய அச்சமான சூழலில் பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
