'அதிர்ச்சியூட்டும்' செய்திகளால் 'பாதிக்கப்பட்ட' ஊழியர்களுக்கு... 'இழப்பீட்டுடன்' மனநல ஆலோசனை.... 'ஒப்புக்கொண்ட' பிரபல நிறுவனம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | May 13, 2020 08:15 PM

பேஸ்புக் நிறுவனம் அதன் தணிக்கை பணிகளை செய்யும் ஊழியர்களுக்கு இழப்பீடும், மனநல ஆலோசனையும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

Facebook Agrees To Pay $52M To Traumatised Content Moderators

பேஸ்புக் நிறுவனம் அதன் வலைதளத்தில் அதிர்ச்சியூட்டும் எதிர்மறை தகவல்கள், படங்களை தணிக்கை செய்து வெளியிட ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. இந்நிலையில் அந்த ஊழியர்கள் கொலை, பாலியல் வன்கொடுமை, வன்முறை தொடர்பான செய்திகள் மற்றும் படங்களை திரும்பத் திரும்ப பார்க்க வேண்டி இருப்பதால் மனநல பாதிப்புக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் பெண் பணியாளர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது பேஸ்புக் நிறுவனம் தணிக்கை பிரிவிலுள்ள அதன் முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்கள் 11,250 பேருக்கு மொத்தமாக 392 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம் அந்த ஊழியர்கள் அனைவருக்கும் 75 ஆயிரம் முதல் நான்கரை லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும் எனவும், அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.