முதல்வர் மற்றும் 'பிரதமர்' கொரோனா 'நிவாரண' நிதிக்கு... நன்கொடை வழங்கிய 'நட்சத்திர' தம்பதி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 31, 2020 05:11 PM

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்து இருப்பதால் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதே நேரம் கொரோனா நிவாரண நிதிக்கு ஒவ்வொரு குடிமகனும் நன்கொடை வழங்கலாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு இருக்கிறார். இதேபோல மாநில அரசுகளும் கொரோனா நிவாரண நிதி வழங்கும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.

Virat and Anushka donating PM cares and CM relief Fund

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து மஹாராஷ்டிரா மாநிலத்துக்கும், பிரதமர் நிவாரண நிதிக்கும் நன்கொடை அளித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், '' மஹாராஷ்டிரா மாநில முதல்வர் மற்றும் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நானும், அனுஷ்காவும் இணைந்து குறிப்பிட்ட தொகையை வழங்கி இருக்கிறோம்,'' என தெரிவித்து இருக்கிறார்.

எவ்வளவு தொகையை இருவரும் சேர்ந்து வழங்கினார்கள் என்ற  விவரத்தை விராட், அனுஷ்கா இருவரும் தெரிவிக்கவில்லை. ஆனால் இருவரும் சேர்ந்து 3 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி இருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.