'சடலங்களை புதைக்க பிரமாண்டமான இடுகாடு...' 'கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணம்...' 'புதிய அமைதி பள்ளத்தாக்கு' என பெயர் சூட்டிய ஈராக்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Mar 31, 2020 11:19 AM

ஈராக்கில் கொரோனாவால் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது உயிரிழந்த சடலங்களை புதைப்பதற்காக மிகப் பெரிய இடுகாட்டை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.

The largest burial ground to bury the dead by coronavirus

உலக முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,780-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 7,84,381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,65,035 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிகை 1,071லிருந்து 1,251 ஆக அதிகரித்துள்ளது.

உலக நாடுகளை கதிகலங்க செய்துள்ள கொரோனா வைரஸால், ஈராக்கும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நோய் பரவலை தடுக்கும் வகையில் வரும் ஏப்ரல் 11-ம் தேதி வரை அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எல்லைகள் மூடப்பட்டு, சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் கொரோனாவின் தாக்கம் அங்கு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ நெருங்கி வருகிறது.

இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்காக நஜஃப் என்ற பகுதியில் மிகப் பெரியபிரமாண்டமான இடுகாட்டை ஈராக் அரசு அமைத்துள்ளது. புதிய அமைதி பள்ளத்தாக்கு என பெயரிடப்பட்டுள்ள இந்த இடுகாட்டில் இதுவரை 13 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Tags : #CORONAVIRUS