இவ்ளோ 'பணம்' இருந்தா போதும்... லைஃப்ல 'செட்டில்' ஆயிடுவேன்... உடைந்த 'ரகசியம்' தோனி சொன்ன அமவுண்ட் எவ்ளோன்னு பாருங்க?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 31, 2020 12:47 AM

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், தோனி சொன்ன ஒரு ரகசியத்தை தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார்.

Dhoni wanted to make 30 Lakh and live peacefully in Ranji

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டிக்குப்பின் தோனி எந்தவிதமான போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் அவர் தன்னுடைய பார்மை நிரூபித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்போது தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில் தோனி குறித்த ரகசியம் ஒன்றை இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர் வெளிப்படுத்தி இருக்கிறார். ரசிகர்கள் உடனான கேள்வி-பதில் நிகழ்வொன்றில் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர் ஒருவர் அவர் குறித்த மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். பதிலுக்கு ஜாபர் தோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலத்தில் பகிர்ந்த விஷயம் ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.

இந்திய அணியில் தோனி இடம்பெற்ற ஓரிரண்டு ஆண்டுகளில் ஒரு 30 லட்சம் சம்பாதித்து விட்டால் ராஞ்சியில் சென்று செட்டில் ஆகி விடுவேன். அமைதியான வாழ்க்கை வாழ்வேன் என அவர் வாசிம் ஜாபரிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்திய அணியின் ஆகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக பின்னாளில் மாறிய தோனியின் சொத்து மதிப்பு தற்போது பல நூறு கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.