அதெல்லாம் 'மன்னிப்பு' கேட்க முடியாது... கொரோனா விவகாரத்தில் 'சீனாவுக்கு' செம பதிலடி... 'எந்த' நாடுன்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Mar 31, 2020 02:14 AM

கொரோனா விவகாரம் தொடர்பாக வரையப்பட்ட கார்ட்டூனில் எந்த தவறும் இல்லை. அதனால் நாங்கள் மன்னிப்பு கேட்க முடியாது என டென்மார்க் அரசு தெரிவித்து உள்ளது.

Denmark Refuses To Apologise To China Over Coronavirus Cartoon

சீனாவில் இருந்து பரவியதால் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்றே அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டு வந்தார். இதனால் சீன அரசு அமெரிக்க அதிபரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. தற்போது அமெரிக்காவிலும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் ட்ரம்ப் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். இதற்கிடையில் சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்க அதிபருடன் டெலிபோனில் பேசியதையடுத்து, இனிமேல் அப்படி பேசப் போவதில்லை என்று டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்த நிலையில் டென்மார்க் நாட்டின் ஜில்லண்ட் போஸ்டர்ன் என்ற பத்திரிகை கடந்த 23- ந் தேதி ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. அந்த கார்ட்டூனில் சீன தேசியக் கொடியில் உள்ள ஐந்து நட்சத்திரங்களுக்கு பதிலாக ஐந்து கொரோனா வைரஸ் வடிவங்கள் இடம் பெற்றிருந்தன.இந்த கார்ட்டூன் வெளியானதும் சீனா கடும் கோபமடைந்து டென்மார்க் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தது. டென்மார்க்கில் உள்ள சீன தூதரகமும் இதே கோரிக்கையை வலியுறுத்தியது.

ஆனால் இதுகுறித்து மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று டென்மார்க் அரசு பதில் அளித்தது. மேலும் டென்மார்க் அதிபர் ஃப்ரெட்ரிக்ஸன் இதுகுறித்து கூறுகையில், '' எங்களது நாட்டில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் இருப்பது போல வரைவதற்கு சுதந்திரம் இருக்கிறது,'' என தெரிவித்து இருக்கிறார்.