‘இரவு உணவு 1.45 மணிக்கு ’!.. ‘ரெஸ்ட்டே இல்லாம வேலை பாக்குறோம்’.. ‘எங்களுக்காக இத மட்டும் பண்ணுங்க’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 31, 2020 04:04 PM

ஊரங்கு உத்தரவால் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வரும் காவலர்கள் குறித்து தமிழ்நாடு காவல்துறை உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Tirunelveli DSP Arjun Saravanan tweet Corona crisis about and curfew

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என போலீசார் அறிவித்துள்ளனர். தடையை மீறி வெளியே வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இரவு பகலாக பாதுகாப்பு பணியாற்றி வரும் காவலர்கள் குறித்தும், அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பெற்றோர் தூங்கியிருப்பார்களா?, மனைவி சாப்பிட்டிருப்பாரா?, குழந்தைகள் பத்திரமாக இருப்பார்களா?, கொரோனா வைரஸ் காலத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பார்களா? என தெரியாது. நான் பணியாற்றும் பகுதியின் மக்கள் நிம்மதியாக தூங்க, அத்தியாவசிய பொருள் வாங்க, விழிப்புணர்வுடன் இருக்க கடமையாற்றுவேன்’ என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் தமிழ்நாடு காவல்துறை, ‘நேரம், உணவு, ஓய்வு மறந்து பணியில் இருக்கின்றோம் உங்களுக்காக.., நீங்கள் ஓய்வாக வீட்டிலேயேயிருங்கள் எங்களுக்காக.,’ என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர் ஒருவர் தனது இரவு உணவை நள்ளிரவு 1.45 மணியளவில் உண்ணும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளனர்.