“மணிக்கு ஒரு முறை செஃல்பி எடுத்து அனுப்புங்க!”.. ‘வீட்லயே தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு’ .. அமைச்சர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டவர்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை செல்பி எடுத்து மொபைல் மூலமாக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரை கண்காணிப்பதற்கான புதிய மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை ஜிபிஎஸ் அமைப்புடன் சேர்த்து செல்ஃபி எடுத்து, வீட்டிலேயே தனிமைப் படுத்தப் பட்டவர்கள் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் அவ்வப்போதைய நிலைப்பாட்டை தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும் என்றும் புகைப்படங்கள் தவறானது என்று கண்டுபிடிக்கப் பட்டால், வீட்டில் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்வதற்கு பதிலாக தனிமைப்படுத்தப்படும் முகாமுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
