கொஞ்சம் கூட 'பாலோ' பண்ண மாட்றாங்க... காய்கறி 'சந்தையை' இழுத்து மூடிய கலெக்டர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 31, 2020 02:44 AM

மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காத காரணத்தால் மாவட்ட கலெக்டர் காய்கறி சந்தையை இழுத்து மூடியிருக்கிறார்.

Public not followed Social Distance in Krishnagiri District

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசும் மாநில அரசுகளும் மக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனாலும் மக்கள் பலர் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டு சமூக விலகலை கடைபிடிக்க மறுக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பேருந்து நிலையத்தில் உள்ள சந்தையை மாவட்ட கலெக்டர் பிரபாகர் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். சந்தையை நேரில் சென்று கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்துள்ளார். அப்போது மக்கள் அங்கு சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று காய்கறி வாங்கியுள்ளனர். இதையடுத்தே கலெக்டர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.