'2000 பேர்' பங்கேற்ற 'மத நிகழ்ச்சி'... '200' பேருக்கு 'வைரஸ் தொற்று'... 'தமிழகத்திலிருந்து' பங்கேற்ற '82 பேருக்கு' அறிகுறி...
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோவை திரும்பிய 82 பேரில் பெரும்பாலானோருக்கு கொரோனா அறிகுறி இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியின் நிசாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.
அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான வெளிநாட்டினரும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களில் சுமார் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களிடமிருந்து இந்த வைரஸ் பரவியுள்ளது. பின்னர் அவரிடம் இருந்து பலருக்கும் வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையே, இஸ்லாமிய மத நிகழ்ச்சியில் பங்கேற்று காஷ்மீர் திரும்பிய நபர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். அதேபோல், மத நிகழ்ச்சியில் பங்கேற்று தெலுங்கானா திரும்பியவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து இந்த மாநாட்டில் கோவை, மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி, அன்னூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 82 பேர்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த நபர்களும், அந்த மாநாட்டை முடித்துக் கொண்டு கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்திருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்தபோது அவர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டெல்லி மாநாட்டில் பங்கேற்ற கோவையை சேர்ந்த 82 பேரை மாவட்ட நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது.
அந்த 82 பேரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது. இதில், பெரும்பாலோனோருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிய வந்திருப்பதாகவும், அவர்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனையில் இருப்பதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
