“யாராச்சும் ஏப்ரல் 1-ஆம் தேதி முட்டாள் தினம்னு, கொரோனா நேரத்துல இதெலாம் பண்ணீங்க” .. எச்சரித்த அமைச்சர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 31, 2020 03:55 PM

“ஏப்ரல் 1ம் தேதியான நாளை முட்டாள்கள் தினம் என்பதால் தவறான தகவல்களை பரப்பக்கூடாது” என்று மகாராஷ்டிர அமைச்சர் அனில் தேஷ்முக் எச்சரித்துள்ளார். 

wont allow fake news to make fool others on april 1st in corona time

ஏப்ரல் 1-ஆம் தேதி முட்டாள்கள் தினம் என்று கூறி, பலரையும் முட்டாள்களாக்கி, தவிக்கவிடுவதும் ஏமாற்றுவதும் வாடிக்கையான ஒன்றாக பல வருடங்களாகவே மக்கள் மத்தியில் இருந்து வரும் மாறாத பழக்கம். 

இந்நிலையில், இதுபோன்ற சமயங்களில் ஏமாற்றப்பட்ட பலரும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் சமயத்தில் இதுதொடர்பாக ஏதேனும் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றி மகாராஷ்டிர அமைச்சர் அனில் தேஷ்முக் எச்சரித்துள்ளார். 

Tags : #CORONA #CORONAVIRUS #MAHARASHTRA