பல ஆயிரம் வருசமா 'ரெண்டு' உயிரினங்கள் உடம்புல வாழ்ந்திட்டு வந்துருக்கு...! 'மூன்றாவது தான் மனுஷன்...' கொரோனா வைரஸ் குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் அழிந்து வரும் ஓரு உயிரினத்தில் இருந்து பரவி இருக்க கூடும் என தற்போது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள்.

தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் உஹான் மாகாணத்தில் செயல்படும் கறி சந்தையிலிருந்து மனிதர்களுக்கு பரவியது என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கொரோனா வைரசால் இதுவரை சுமார் 7,85,712 பேர் பாதிப்படைந்து உள்ளனர். மேலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு 165,606 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில் 37,814 இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தற்போது சீன அரசால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், தென் சீனாவில் பல ஆயிரம் ஆண்டுகளாக ஹார்ஸ்ஹூ வவ்வால்களில் ஒரு கிருமி தொற்றி இருந்ததாகவும், இயற்கையாகவே வவ்வால்களுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியால் அந்த வைரஸ் தன்னை பாதிக்காமல் பார்த்துக்கொண்டது எனவும் கூறியுள்ளனர். மேலும் ஹார்ஸ்ஹூ வவ்வால்கள் பரிணாம வளர்சியடைய, அவைகளுக்கு தெரியாமலேயே அந்த கிருமியும் தன்னை தற்காத்துக்கொண்டு நீடித்தது. அந்த கிருமிதான் கொரோனா வைரசின் மூதாதையரான SARS Cov 2.
பல ஆண்டுகளுக்கு முன் வவ்வால்களிடம் இருந்து கொரோனோவின் மூதாதையர் SARS Cov 2 பேன்கோலின் அல்லது எறும்புத் திண்ணி என்னும் உயிரியின் உடலுக்குள் கடத்தப்பட்டது. இவ்வாறு வேறொரு உயிரினத்திற்கு மாறிய வைரஸ்கள், புதிய உயிரினத்தின் செல்களுக்குள் நுழைவதற்கு ஏற்ப தன்னை உருமாற்றிக்கொள்வதுடன் மேலும் வலுவானதாக மாறுகின்றன. அவ்வாறே, எறும்பு திண்ணியின் உடலிலும் உறுமாற்றிக்கொண்டு உயிர் வாழ்ந்துள்ளது கொரோனா வைரஸ்.
சீனாவில் எறும்பு திண்ணி உயிரினம் தற்போதும் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன. எறும்பு திண்ணி உயிரினம் விற்கப்படும் இடத்தில் இருந்து தான் வைரஸ் தனது புது இருப்பிடமாக மனித உடல்களை தேர்தெடுத்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
மனித உடலுக்குள் நுழைந்த கொரேனா வைரஸ் மனித செல்களுக்குள் ஊடுருவும் வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. இவ்வாறே உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
