WATCH VIDEO: ‘எங்கப்பா பந்து?’... ‘கடைசி ஓவரில் என்ன நடந்தது?’... ‘விவாதத்தை கிளப்பிய ரசிகர்கள்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jan 24, 2020 06:36 PM

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய வீரர் மணீஷ் பாண்டே, பீல்டிங் செய்வது போல பாவனை செய்ததை அம்பயர்கள் கவனிக்க தவறியதால் அபராதத்தில் இருந்து இந்திய அணி தப்பியதாகவும், இல்லை அது தெரியாமல் எதேச்சையாக நடந்தது என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதத்தை கிளப்பியுள்ளனர்.

IND VS NZ: Umpires fail to notice fake fielding attempt

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி களத்தில் இறங்கி ஆடியது.  இப்போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது போட்டியின் கடைசி ஓவரில், நியூசிலாந்து வீரர் டைலர், பந்தை பவுண்டரிக்கு அடிக்க, முன்கூட்டியே பந்தை தடுக்க வந்த இந்திய வீரர் மணீஷ் பாண்டே, பந்தை எடுக்காமல் தவறவிட்டுட்டு பந்தை வீசுவது போல் வெறும் கையை வைத்து சைகை வீசினார்.

ஐசிசி விதி 41.5-ன் படி எதிரணியைச் சேர்ந்தவரை வார்த்தைகள் மூலமாகவோ, செயல்கள் மூலமாகவோ குழப்பி குழப்பும் வகையில், 'Fake Fielding' என அழைக்கப்படும் இந்த வித பீல்டிங்குகளுக்கு தற்போது முழுக்க முழுக்க தடை விதித்துள்ளது ஐசிசி. இந்த வித விக்கெட் எடுப்புகளுக்கு அபராதமாக எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.  இந்நிலையில் மணீஷ் பாண்டே பந்தை எடுக்காமல் சைகை காட்டியதை, அம்பயர்கள் கவனிக்க தவறியதால், இந்திய அணி 5 ரன்கள் அபராதத்தில் இருந்து தப்பியது.

பின்னர் பந்தை எடுத்து ஜடேஜா தூக்கி பவுலர் பும்ராவை நோக்கி வீசினார்.  மேலும் பாண்டே இந்தப் பந்தை தவறவிட்டதை கவனித்த கோலி அவரை நோக்கி கோபமாக கத்தியதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தப் போட்டியில் வெற்றிப்பெற்ற பின்னர் பேட்டியளித்த கேப்டன் விராத் கோலி, பீல்டிங் ஒன்றுதான் நாங்கள் சரிசெய்ய வேண்டிய விஷயம் என்று கூறிய நிலையில், இளம் வீரரான மணீஷ் பாண்டே இவ்வாறு செய்ததை அடுத்து ரசிகர்கள் சமூவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags : #VIRATKOHLI #MANISH PANDEY #INDVSNZ #FAKEFIELDING