VIDEO: தர்மப்பிரபு நீங்க 'இங்கேயும்' வந்துட்டீங்களா?... பாய்ந்து 'பிடித்த' வீரரால்... பதறும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 24, 2020 03:49 PM

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை எடுத்தது.

IND Vs NZ: Martin Guptill caught a stunning Catch, Video

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரோஹித் சர்மா 7 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து ராகுலுடன் சேர்ந்த கோலி அணிக்கு நல்ல துவக்கம் அமைத்து கொடுத்தார். மீண்டுமொருமுறை தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல்(56)  10-வது ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 115 ஆக இருந்தது.

இதையடுத்து இந்திய அணிக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 12-வது  ஓவரின் முதல் பந்தை தூக்கியடிக்க தூரத்தில் நின்றிருந்த மார்ட்டின் குப்தில் பாய்ந்து வந்து அந்த பந்தை பிடித்து விராட்டை(45) வெளியேற்றினார். உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோனியின் ரன்-அவுட்டுக்கும் குப்தில் தான் காரணம் என்பதால் எங்களை கடுப்பேத்துறதே வேலையா போச்சு என ட்விட்டரில் இந்திய ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.