VIDEO: ஆமா உனக்கு 'பவுலிங்' தெரியுமா?... அணியின் இளம்வீரரை...'வீடியோ' போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் தவான், ரோஹித் இருவரும் அவ்வப்போது காயத்தால் அவதிப்படுவதால், கே.எல்.ராகுலின் நிலைதான் மிகவும் கவலைக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்திய அணிக்கு தவான், ரோஹித், ராகுல் என 3 ஓபனிங் பேட்ஸ்மேன்கள் தற்போது இருக்கின்றனர். இதில் மூவரும் கடந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆட்டத்தின்போது சிறந்த பார்மில் இருந்தனர். இதனால் கே.எல்.ராகுல் சில நேரங்களில் 3-வது பேட்ஸ்மேன், 5-வது பேட்ஸ்மேன், ஓபனிங் பேட்ஸ்மேன் என மாறிமாறி இறங்கினார்.
எனினும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தன்னை ஒரு நல்ல பேட்ஸ்மேனாக வெளிப்படுத்தினார். முதல் போட்டியின்போது ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் விக்கெட் கீப்பராகவும் அவர் களமிறங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என இரண்டு நிலைகளிலும் அவர் தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார்.
Team India trying to finalize KL Rahul's batting position. #IndvsAus pic.twitter.com/c9S8D3wXmN
— Sagar (@sagarcasm) January 19, 2020
இந்தநிலையில் இந்திய அணியில் கே.எல்.ராகுலை மாற்றி மாற்றி விளையாட வைக்கும் விராட் கோலியை கலாய்த்து வருகின்றனர். அதில் தம்பி உனக்கு பவுலிங் தெரியுமா? என்று விராட், ராகுலிடம் கேட்பது போலவும் பதிலுக்கு அவர் எனக்கு டிக்கெட் போடுங்க நான் ஊருக்கே போறேன் என்று சொல்வது போலவும் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து உள்ளனர்.
உச்சகட்டமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ராகுல் பின்னால், முன்னால், நடுவில் என்று தன்னுடைய இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
