இந்தியாவை 'துரத்தும்' சோகம்... காயத்தில் சிக்கிய 'முன்னணி' பவுலர்... என்ன செய்ய போகிறார் கோலி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான், ரோஹித் சர்மா இருவரும் காயத்தால் அவதிப்பட்டனர். இதில் ரோஹித் குணமடைந்து விட்டார். ஆனால் தவானின் காயம் பெரிதாக இருப்பதால் நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இஷாந்த் சர்மா தற்போது கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இன்று விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது 5-வது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா எல்.பி.டபிள்யூ கோரியபோது கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கணுக்காலில் அடிபட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் காயத்தின் தன்மை பெரிதாக இருக்கும் பட்சத்தில் அவரால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட முடியாத சூழ்நிலை ஏற்படலாம். தவான், இஷாந்த் என அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் பலரும் காயத்தில் அவதிப்படுவதால் கோலி என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
