மைதானத்துக்கு 'வெளிய' உக்கார வச்சா... எப்டி பெரிய 'பேட்ஸ்மேனா' ஆக முடியும்?... 'தெறிக்க' விட்ட முன்னாள் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் தற்போதைய நிலை குறித்து முன்னாள் வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான வீரேந்திர ஷேவாக் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், '' தற்போது உள்ள இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடுகின்றனர். அதே நேரம் மிடில் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு கேப்டனின் ஆதரவு தேவைப்படுகிறது. தோனியின் தலைமையின் கீழ் விளையாடியபோது அணியில் வீரர்களின் பேட்டிங் இடம் குறித்த ஒரு தெளிவு இருந்தது.
அணியில் விளையாடும் வீரர்களுக்கு தோனி எப்போதும் ஆதரவாக செயல்பட்டு இருக்கிறார். சிரமங்களை எதிர்கொண்டாலும் வீரர்களை அவர் பாதுகாக்க தவறவில்லை. நானும் துவக்க ஆட்டக்காரராக விளையாடுவதற்கு முன் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன். மைதானத்திற்கு வெளியில் அமர வைக்கப்பட்டால் வீரர்களுக்கு முன்னேற்றம் கிடைக்காது. அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
தற்போது அணியின் 5-ம் இடத்தில் விளையாடும் கே.எல். ராகுலுக்கு தொடர்ந்து நான்கு வாய்ப்புகளாவது அளிக்கப்பட வேண்டும். அவர் தன்னை நிரூபிக்க தவறும் பட்சத்தில் அவர்மீது அடுத்தகட்ட நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொள்ளலாம்,'' என ஆலோசனை வழங்கி இருக்கிறார்.
