அவருக்கு ‘அத’ பண்ணனும்னு ‘அவசியமே’ இல்ல... ‘ஆனாலும்’ பண்ணினாரு... நெகிழும் ‘பிரபல’ வீரர்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jan 23, 2020 11:56 AM

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

Steve Smith Speaks About Virat Kohlis Gesture During 2019 World

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியின்போது இந்திய ரசிகர்கள் சிலர் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஸ்மித்தை விமர்சித்தனர். அதற்கு அப்போது கோலி தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள ஸ்மித், “உலகக் கோப்பையில் விராட் கோலி செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை செய்ய வேண்டுமென அவருக்கு அவசியமே இல்லை. ஆனாலும் அவர் செய்தார். அவருடைய செயல் மிகவும் அழகானது, பாராட்டத்தக்கது” என நெகிழ்ந்து கூறியுள்ளார். சமீபத்தில் இதற்காக விராட் கோலி ஐஐசியின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதைப் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்போது பேசிய விராட் கோலி, “எனக்கு இந்த விருது கிடைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த நேரத்தில் ஸ்மித்தின் நிலைமையைப் புரிந்துகொள்ள முடிந்தது. இது மாதிரியான சூழல்களை நாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.