'கேட்ச்' புடிச்சது கேப்டன் தான்... ஆனா 'நிழலப்' பாத்தா அப்டி தெரியலையே... 'வைரலாகும்' புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 20, 2020 03:36 PM

நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 2-வதாக இலக்கை விரட்டிய இந்திய அணி 47.3 ஓவர்கள் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை(289) எட்டியது. இதன் வழியாக இந்திய அணி ஒருநாள் தொடரை  2-1 என்ற கணக்கில் வென்றது.

IND Vs AUS: Virat Kohli\'s stunning catch goes viral

போட்டியின் போது விராட் கோலி பிடித்த கேட்ச் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 32-வது ஓவரை ஜடேஜா வீசினார். அப்போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா பந்தை எதிர்கொண்ட  லாபுஷேன் அந்த பந்தை லேசாக தூக்கியடிக்க சரியாக பந்தை கணித்த விராட் கோலி, ஒரு டைவ் அடித்து அந்த பந்தை கேட்ச் பிடித்து லாபுஷேனை வெளியேற்றினார்.

விராட் கோலி கேட்ச் பிடித்த விதம் கண்டு ரசிகர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்ய, பதிலுக்கு தலை வணங்கி விராட் கோலி அவர்களின் பாராட்டை ஏற்றுக் கொண்டார். விராட் கேட்ச் பிடித்தபோது அவரின் நிழல் பாய்ந்து செல்லும் ஒரு சிறுத்தை போன்று இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் அதிகளவில் பகிர, தற்போது சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.