நம்பி எறக்கி விட்டதுக்கு... இப்டி 'மானத்தை' வாங்கிட்டீங்களே ?... தலையில் அடித்துக்கொண்ட 'பிரபல' வீரரின் மனைவி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 20, 2020 04:11 PM

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்திய இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Mitchell Starc\'s Wife Alyssa Healy Reacts To His Dismissal

போட்டியின்போது அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் ரன்ரேட்டை உயர்த்தும் நோக்கத்துடன், வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முன்னதாக 5-வது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பி வைத்தார். ஆனால் 2 பந்துகளை சந்தித்த ஸ்டார்க், ஜடேஜாவின் 3-வது பந்தில் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.

இதைப்பார்த்த பாக்ஸ் கிரிக்கெட் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் புதிய, ''5-ம் வரிசை பேட்ஸ்மேன் மிட்செல் ஸ்டார்க் டக்-அவுட் ஆனார்,'' என்று கேலியாக ட்விட்டரில் பதிவிட்டது. பதிலுக்கு ஸ்டார்க்கின் மனைவி அலிசா ஹீலே, இப்டி மானத்தை வாங்கிட்டீங்களே என்பதுபோல தலையில் அடித்துக்கொள்ளும் எமோஜி ஒன்றை போட்டு பதிலளித்தார்.

இதைக்கண்ட ரசிகர்கள் நீங்கள் அவருக்கு கிரிக்கெட் கற்றுக்கொடுங்கள் என்று கிண்டல் செய்து வருகின்றனர். ஏனெனில் அலிஸா ஹீலே, ஆஸ்திரேலிய மகளிர் அணியின் விக்கெட் கீப்பராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.