விராட்கோலி தான் பெஸ்ட்... இல்ல ஸ்டீவ்ஸ்மித் தான் பெஸ்ட்... தல...தளபதி ரேஞ்சுக்கு தெறிக்கவிடும் ட்விட்டர் பதிவுகள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Suriyaraj | Jan 21, 2020 01:06 PM

விராட் கோலி தான் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்றும், இல்லை, இல்லை ஆஸ்திரேலியாவின்  ஸ்டீவ் ஸ்மித்தான்  உலகின் சிறந்த பேட்ஸ் மேன் என்றும் பலரும் தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் அதிரடியாக பகிர்ந்து வருகின்றனர்.

Virat Kohli is the world\'s best batsman - Michael Vaughan

விராட் கோலிக்கும், ஸ்மித்துக்கும் இடையே உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஸ்டீவ் சுமித்தான் கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் தற்போது சிறந்த பேட்ஸ்மேன். அவர் மீண்டும் ஒருமுறை அதை நிரூபித்துள்ளார். என்று டேனியல் அலெக்சாண்டர் என்பவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், இது தவறானது, விராட் கோலி தான் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் உலகின் தலைசிறந்த பேட்ஸ் மேன் எனக் கூறியுள்ளார்.

விராட் கோலி தான் 3 வடிவிலான போட்டிகளுக்கும் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச்சும் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

விராட்கோலி தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #VIRATKOHLI #STEVE SMITH #MICHAELVAUGHAN #TWITTER TRENDING