'அவ்ளோ' சதம் அடிச்சவர விட்டுட்டு... சின்ன பையன 'டீம்ல' எடுத்ததுக்கு... இதுதான் காரணமாம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிராக அறிவிக்கப்பட்ட ஒருநாள் அணியில் தவானுக்கு பதிலாக இளம்வீரர் பிரித்வி ஷாவை எடுத்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாடும் பொருட்டு இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு விராட் கோலி தலைமையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் தவான் காயமடைந்ததால் அவருக்கு பதிலாக ஒருநாள் போட்டிகளில் பிரித்வி ஷாவும், டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சனும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தவானுக்கு பதிலாக மயங்க் அகர்வால், சுப்மன் கில் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக பிரித்வி ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அகர்வால் 81 மேட்சுகளில் விளையாடி ஆவரேஜ் 50.11 வைத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 101.29 ஆக உள்ளது.
சுப்மன் கில் 54 மேட்சுகள் விளையாடி ஆவரேஜ் 47.53, ஸ்ட்ரைக் ரேட் 88.79 வைத்திருக்கிறார். அதே நேரம் வெறும் 27 போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கும் பிரித்வி ஷாவின் ஆவரேஜ் 44.25 , ஸ்ட்ரைக் ரேட் 117.85 ஆக உள்ளது. இதனால் தான் பிரித்வி ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.