'ஒருநாள் நீ இருந்து பாரும்மா...' 'ஒருநாள்' முதல்வர் போல்... ஒருநாள் தலைமை ஆசிரியராக பதவியேற்ற மாணவி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 24, 2020 06:31 PM

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை கவுரவிக்கும் வண்ணம் அரசு பள்ளி மாணவிக்கு ஒரு நாள் தலைமையாசிரியர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

leadership of the style of mixing school, student, teache

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனுர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 75 மாணவ, மாணவிகளும், 7 ஆசிரியர்களும் உள்ளனர். இப்பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஐம்பெரும் விழா நடந்தது.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண்களை கவுரவிக்கும் வண்ணம் பள்ளியில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வருகைப் பதிவு, சக மாணவ, மாணவியர்களிடம் பழகும் மனப்பான்மை, பிறருக்கு உதவி செயதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய 10ம் வகுப்பு மாணவி காவ்யாவை ஒரு நாள் தலைமையாசிரியராக நியமித்து நேற்று முழுவதும் அவருடைய வழிகாட்டுதல் படி பள்ளி செயல்பட்டது.

பள்ளிக்கு வந்த காவ்யாவை தலைமையாசிரியர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட சக ஆசிரியர்கள் வரவேற்று தலைமையாசிரியர் நாற்காலியில் அமரவைத்து வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

தலைமையாசிரியரின் பணி குறித்து விநாயக மூர்த்தி எடுத்துகூறினார். அதன்பின் ஆசிரியர்களுடன் மாணவ, மாணவியர்களின் கல்வி குறித்து காவ்யா ஆலோசனை நடத்தினர். பாடங்கள் கற்பிக்கும் விதம், மாணவ, மாணவியர்கள் ஆர்வமாக பாடங்களை கவனிக்கின்றனரா?உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடந்தது.பின் தலைமையாசிரியராக பொறுப்பேற்ற காவ்யா ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று பாடங்கள் கற்பிக்கும் திறன் குறித்து ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்கள் விளையாட்டு உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார். அரசு பள்ளி மாணவியை ஒரு நாள் தலைமையாசிரியராக நியமித்த விஷயம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : #HEADMASTER