ஒருவழியா 'கேப்டனுக்கு' அடிச்ச லக்... ஆனாலும் இது 'சரிப்பட்டு' வருமா?... ரசிகர்கள் கேள்வி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 24, 2020 12:16 PM

நியூசிலாந்து-இந்தியா மோதும் முதல் டி20 போட்டி இன்று பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனையொட்டி சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸை வென்ற கேப்டன் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

IND Vs NZ: India won the toss and choose to Bowl first

நியூசிலாந்து பவுலர்கள் மிகவும் டப் கொடுக்க கூடியவர்கள் என்பதால் முதலில் பவுலிங் தேர்வு செய்தது சரியா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் 2-வதாக பேட்டிங் செய்த இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

முன்னதாக ஆஸ்திரேலியாவுடன், இந்தியா மோதிய 3 ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி டாஸ் வெல்லவில்லை. எனினும் அந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் டாஸ் எந்தளவுக்கு பங்கு வகிக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.