VIDEO: உன்ன 'முழுசா' நம்புனதுக்கு... என்ன இப்டி 'வச்சு' செஞ்சிட்டியே தம்பி... கோபத்தில் 'கொந்தளித்த' கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கியது. போட்டியின் 9-வது ஓவரை முகம்மது ஷமி வீசினார். இதில் 5-வது பந்தை எதிர்கொண்ட ஸ்டீவ் ஸ்மித் பந்தை பின்னால் அடித்துவிட்டு ரன்கள் ஓட ஒருசில அடிகள் எடுத்து வைத்தார். இதனைக்கண்ட கேப்டன் ஆரோன் பிஞ்ச் மறுமுனையில் இருந்து வேகமாக ஓடிவந்தார்.

Who is to blame for this mix up - Finch or Smith?
Live: https://t.co/KQxYzckv5Q#INDvAUS #INDvsAUS @bcci #AUSvIND @cricketcomaupic.twitter.com/R6lhHa5UKq
— 🏏FlashScore Cricket Commentators🏏 (@FlashCric) January 19, 2020
ஆனால் ஸ்மித் மீண்டும் எல்லைக்கோட்டுக்கு திரும்பி விட்டார். இதற்கிடையில் பந்தை பிடித்த ஜடேஜா இருவரும் ஒரே திசையில் நிற்பதை பார்த்து எதிர்புறம் இருந்த ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார். ஆனால் அந்த பந்து ஸ்டம்பை அடிக்கவில்லை. எனினும் அந்த பந்தை பிடித்த ஷ்ரேயாஸ் மீன்டும் முகம்மது ஷமியை நோக்கி எறிய பிஞ்ச் ஓடி வருவதற்குள் அந்த பந்தை பிடித்து ரன் அவுட் செய்து விட்டார்.
இதையடுத்து மைதானத்தை விட்டு வெளியேறிய பிஞ்ச் கோபத்தில் ஸ்மித்தை கண்டபடி திட்டிக்கொண்டே மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
